வணக்கம்! வருக!! வருக!!!
லூயிவிலின் தமிழ்க் கல்விக்கழகத்தின் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி!லூயிவிலின் தமிழ்க் கல்விக்கழகமானது லூயிவில் மாநகரிலும் லக்சிங்டன் நகரிலும் நேரிடை வகுப்புகளாக (வியாழன்தோறும்) இயங்குகிறது!!
மேலும் இதில் பெரியவர்களுக்கான பேசுத்தமிழ் வகுப்புகள் வியாழன்தோறும் நேரிடை வகுப்புகளாக இயங்குகிறது!!!
லூயிவில் தமிழ்க் கல்விக்கழகத்தின் நோக்கங்கள்
தமிழார்வம் உள்ள தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து தமிழ் மொழியையும், இலக்கியத்தையும், தமிழர் பண்பாட்டையும் நமது அடுத்த தலைமுறைக்கு கடத்துவதும், நமது மொழிச் சிறப்பை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதுமே லூயிவில் தமிழ்க் கல்விக்கழகத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.
லூயிவில் தமிழ்க் கல்விக்கழகத்தின் இலக்கு
சந்தாத் தொகையில்லாமல், பதவி பெயர்கள் இல்லாமல், தமிழார்வலர்கள் கூடி தமிழர்களின் தமிழ்ப் பற்றிய சிந்தனைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் ஒரு களமாக இருந்து அவர்களை ஊக்குவிப்பதே இந்த கழகத்தின் இலக்கு.
குறிக்கோள் 1
பள்ளி வயது குழந்தைகளுக்கான தமிழ் வகுப்புகள்
செயலாக்கத் திட்டங்கள்:
அ. தமிழ்ப் பாட வகுப்புகள் மழலையர் முதல் நடுநிலைப் பள்ளி வயதுவரை (கலிபோர்னியாத் தமிழ்க் கல்விக்கழக்கதின் அங்கீகாரத்துடன்) - மாணவ பதிவுக்கான விவரத்திற்கு இங்கே சொடுக்கவும்
ஆ. உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இரு மொழி இலச்சினைக்கான பயிற்சிப் பட்டறை.
இ. மேல்நிலை பள்ளி குழந்தைகளுக்கான தமிழிலில் பேசுதல் பயிற்சி வகுப்புகள். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்
குறிக்கோள் 2
பெரியவர்களுக்கான தமிழிலில் பேசுதலுக்கான வகுப்புகள் (தமிழ் மொழி அல்லாதவர்களுக்கும்)
செயலாக்கத் திட்டங்கள்:
பல்கலைக்கழக பேராசிரியர்களால் உருவாக்கப்பட்ட பேசு தமிழ் புத்தகங்கள் மற்றும் காணொளிக்கள் கொண்டு வகுப்புகள் நடத்துதல். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.
குறிக்கோள் 3இலக்கிய கலந்துரையாடல்
செயலாக்கத் திட்டங்கள்:
அ. பெரியவர்களுக்கு மாதாந்திர கலந்துரையாடல் கூட்டங்கள்
ஆ. குழந்தைகளுக்கு திருக்குறளை அறிமுகம் செய்து அதனை படிக்க வைத்தல்
குறிக்கோள் 4
சிறு நிகழ்ச்சிகள் மூலம் பண்பாட்டை வளர்த்தல்
செயலாக்கத் திட்டங்கள்:
அ. நாடக கலையை ஊக்குவித்து ஆண்டுக்கு ஓரிரு நிகழ்ச்சிகளை நடத்துதல்
ஆ. தமிழ் அல்லாதவர்களின் நிகழ்சிகளிலும் பங்கேற்று தமிழர் கலாச்சாரத்தை மற்ற சமூகத்தினருக்கும் தெரியப்படுத்துதல்