கலிபோர்னியாத் தமிழ்க் கல்விக்கழகம்   |  VIEW IN ENGLISH

பேசுத் தமிழ் வகுப்புகள்:

லூயிவில் நகரில் நடைபெறும் பேசுதமிழ் வகுப்பிற்கு உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

உலகின் பழம்பெரும் மற்றும் துடிப்புடன் இயங்கும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை நீங்கள் கற்க விரும்பியமைக்கு வாழ்த்துக்கள். அனுபவமும் தமிழார்வமும் உள்ள தன்னார்வலத் தொண்டர்கள் உங்களுக்கு தமிழ்மொழியின் சிறப்பு குறையாது பேசு தமிழை உங்களின் நிலைகளுக்கு ஏற்ற முறையில் கற்றுக்கொடுக்க உள்ளார்கள்.

உங்களின் பெயர் மற்றும் விவரங்களை கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி பதிவு செய்யுமாறுக் கேட்டுக்கொள்கிறோம்.

பேசுத்தமிழ் வகுப்புகளுக்கு கட்டணம் ஏதும் கிடையாது. மாணவர்கள் கீழ் கண்ட நூலை வாங்கிக்கொள்ள வேண்டும்

FORM

பதிவு செய்தவர்கள் அவர்களின் தமிழ் அறிமுக நிலைக்கேற்ப தனிதனிக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படும்.

தமிழ் மொழியை புதிதாக கற்பவர்களுக்கு பேசுத் தமிழும் அதனை ஏற்கனவே அறிந்தவர்களுக்கு எழுத மற்றும் படிக்கவும் கற்பிக்க வசதிகள் உள்ளன.

பாடதிட்டமானது 30 வகுப்புகள் மற்றும் 2 பருவங்கள் கொண்டது
பருவம் 1: 15 வகுப்புகள் - ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை (மாதம் 3 முதல் 4 வகுப்புகள் வியாழன் தோறும் மாலை 7:00 முதல் 8:00 வரை நடைபெறும்)

பருவம் 2: 15 வகுப்புகள் - ஜனவரி முதல் மே வரை (மாதம் 3 முதல் 4 வகுப்புகள் வியாழன் தோறும் மாலை 7:00 முதல் 8:00 வரை நடைபெறும்)

ஒவ்வொரு வகுப்பும் 1 மணி நேரம் நடைபெறும்.

வகுப்பிற்கு Tamil Language in Context: A Comprehensive Approach to Learning Tamil என்ற முனைவர் வாசு ரெங்கநாதன் (பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர்) அவர்களால் எழுதப்பட்ட புத்தகத்தினை பயன்படுத்த உள்ளோம்.