கலிபோர்னியாத் தமிழ்க் கல்விக்கழகம்   |  VIEW IN ENGLISH

மாணவ மாணவியர் சேர்க்கை விவரம்

விவரங்களை ஆங்கிலத்தில் பார்க்க Click Here to View in English

அ. முதலில் கலிபோர்னியா இணையதளத்தில் மாணவ மாணவியரைப் பதிவு செய்யவும். எவ்வாறு பதிவு செய்வது என்பது பற்றியும் அதற்காக இணைப்பும் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன. கலிபோர்னியா இணையதளத்தில் மாணவ மாணவியரைப் பதிவு செய்ய

ஆ. பள்ளிக்கான கட்டணத்தினை நூல் வழங்கும் நாள் அன்று (ஆகஸ்ட் 3ம் நாள், 2024) பிரையர் பூங்காவில் பணமாகவோ அல்லது கசோலையாகவோ தரலாம். யாரேனும் இணைய வழியாக செலுத்த விரும்பினால் பெலிக்ஸ் அல்லது ரமேஷ் இருவரில் யாரையாவது தொடர்பு கொண்டு அதற்காக இணைப்பைப் பெறலாம்.

இ. ஒரு குழந்தைக்கு மேல் சேர்க்கும் பெற்றோர் கட்டணத்தினை முழுமையாகவோ அல்லது இரண்டு தவணைகளிலோ கொடுக்கலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் (முதல் குழந்தையின் கட்டணமான $200 ஐ ஆகஸ்ட் 3ம் தேதியும் அடுத்தக் குழந்தையின் கட்டணமான $175 ஐ டிசம்பர் 21ம் தேதிக்குள்ளும்).


கலிபோர்னியா இணையதளத்தில் குழந்தைகளின் பதிவு பற்றிய விவரம்
----------------------------------------------------------------------------------------------------------------------------------

கலிபோர்னியாத் தமிழ்க்கல்விக் கழகத்தின் விதிமுறைகளின்படி குழந்தைகளின் பெற்றோர்கள் தான் தங்கள் குழந்தைகளின் விவரங்களை இணையத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான கலிபோர்னியாத் தமிழ்க்கல்விக் கழகத்தின் காரணங்கள்.

**********************
ஒவ்வொரு பெற்றோரும் அவர்களது குழந்தைகளை தனித்தனியாக இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. 1) பெற்றோர் அவர்கள் பிள்ளைகளது பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் போன்றவற்றை பார்க்க அவர்களுக்கு எங்கள் தளத்தில் ஒரு கணக்கு வேண்டும். 2) ஒவ்வொரு பெற்றோரும் Liability waiver agreement ல் கையொப்பம் இடவேண்டும். எனவே ஒவ்வொரு பெற்றோரையும் பதிவு செய்ய சொல்லுங்கள்.
**********************

இணைய முகவரி https://www.catamilacademy.org/cta/login.aspx

இணையத்தில் குழந்தைகளை பதிவு செய்யும் வழிமுறைகள்
-------------------------------------------------------------------------------------------------------------
இணையத்தில் நீங்கள் இரண்டு வழிகளில் உங்கள் குழந்தைகளை பதிவு செய்யலாம்.

அ. முதல் வழி (திரும்ப வரும் பயனாளிகள்)
-------------------------------------------------------------------------------

மேற்கண்ட முகவரி பக்கத்தில் நீங்கள் நேரிடையாக உங்களின் பயனீட்டுச் சொல்லையும் கடவுச் சொல்லையும் அளித்து இணையத்தில் நுழையலாம்.

நுழைந்த பிறகு, பின் குறிப்பிட்ட இணைய இணைப்புகளை கொடுக்கப்பட்ட வரிசையில் சொடுக்கி குழந்தையைப் பதிவு செய்யவும்.

Parent Access --> Child Registration

சென்ற ஆண்டு பள்ளிவந்த குழந்தை எனில் குழந்தையின் பெயரை சொடுக்கி பதிவைத் தொடங்கவும்.

புதிய குழந்தை (சகோதர சகோதரிகளை பதிவுச் செய்ய) எனில் New Student Registration என்ற இணைப்பை சொடுக்கி பதிவைத் தொடங்கவும்.

பிறகு குழந்தைக்கான விண்ணப்பத்தில் நமது பள்ளியை தேர்வு செய்யவும். (In School Site drop down box select "Tamil Academy of Louisville (TAL)"). அத்துடன் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்திச் செய்யவும்.


ஆ. இரண்டாம் வழி (பள்ளிக்குப் புதியவர்கள்)
-----------------------------------------------------------------------------------

மேற்கண்ட பக்கத்தில் உங்களுக்கு Click here to REGISTER for Returning or New Students மற்றும் Student Registration என்ற இரண்டு இணைய இணைப்புக்கள் இருக்கும். அதனை சொடுக்கியும் நீங்கள் இணையத்தில் நுழையலாம். ஆனால் இரண்டு வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டும்.

முதலில் Did any of your children attend CTA in the previous year(s) என்ற வினாவும் இரண்டாவதாக Do you have a Log on to CTA என்ற வினாவும் கேட்கப்படும்.

இரண்டு வினாவிற்கும் இல்லை என்று பதில் அளித்து பதிவைத் தொடங்கவும்.

முதலில் குழந்தைப் பற்றிய முக்கிய விவரம் மட்டும் கேட்கப்படும். இது தவறாக மீண்டும் குழந்தையை பதிவு செய்வதை தவிர்க்க. அதனை அளித்து அடுத்தப் பக்கத்தில் இருந்து பதிவைத் தொடங்கவும்.

நுழைந்த பிறகு குழந்தைக்கான விண்ணப்பத்தில் நமது பள்ளியை தேர்வு செய்யவும். (In School Site drop down box select "Tamil Academy of Louisville (TAL)"). அத்துடன் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்திச் செய்யவும்.

உங்கள் குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப இணையதளம் குழந்தையை ஒரு வகுப்பிற்கோ அல்லது சோதனைத் தேர்வுக்கோ (Evaluation Test) ஒதுக்கீடுச் (Assign) செய்யும்.

உங்கள் குழந்தையை பதிவு செய்தபிறகு இறுதியாக வரும் உறுதிப்பாடு பக்கத்தினை (Confirmation Page) அச்சிட்டுக் (Print) கொள்ளவும்.