கலிபோர்னியாத் தமிழ்க் கல்விக்கழகம்   |  VIEW IN ENGLISH

தமிழ் வகுப்புகள்:

லூயிவிலின் தமிழ்க் கல்விக்கழகமானது கலிபோர்னியா தமிழ்க் கல்விக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று தன்னார்வலர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

கலிபோர்னியாத் தமிழ்க்கல்விக் கழகமானது மாணவர்களின் வயதுக்கு ஏற்ப பல நிலைகள் கொண்ட பாடத்திட்டம் வகுத்து உள்ளார்கள். அதன் விவரங்களுக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும். பாடத்திட்ட விவரம்

லூயிவிலின் தமிழ்க் கல்விக்கழகத்தில் இரண்டு இடங்களில் வகுப்புகள் நடைபெறுகின்றன. 1. லூயிவில் நகரில் வியாழன்தோறும் நேரிடை வகுப்புகள், 2. லக்சிங்டன் நகரில் வியாழன்தோறும் நேரிடை வகுப்புகள்

அனைத்து வகுப்புகளும் மாலை 6:45 முதல் 8:15 வரை மொத்தம் 32 வகுப்புகளாக ஆகஸ்ட் 15, 2024 முதல் மே 1, 2025 வரை நடைபெறும்.

பள்ளிகள் நடைபெறும் முகவரி
1. லூயிவில் நகரில் வியாழன்தோறும் நேரிடை வகுப்புகள்
ஹைலாண்ட்ஸ் லாட்டின் பள்ளி, 10901 ஷெல்பிவில் சாலை, லூயிவில், 40243

2. லக்சிங்டன் நகரில் வியாழன்தோறும் நேரிடை வகுப்புகள்
இம்மானுல் பேப்டிஸ்ட் சர்ச், 3100 டேட்ஸ் கிரீக் சாலை, லக்சிங்டன், கென்டக்கி 40502

நமது பள்ளி வகுப்புகளுக்கு நாம் வகுப்பறை போன்ற சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக நம் நகரில் உள்ள ஹைலாண்ட்ஸ் லாட்டின் பள்ளியில் உள்ள வகுப்பு அறைகளை வாடகைக்கு எடுத்து உள்ளோம்.

அதற்கான வாடகை, பள்ளிப் புத்தகம், குறிப்பேடுகள், வகுப்பு நடத்தும் பள்ளிக்கு காப்பீடுத் தொகை, கலிபோர்னியாத் தமிழ்க்கல்விக் கழக அங்கீகாரத் தொகை, தேர்வுக்கான வினாத்தாள் அச்சிடல், ஆண்டு விழா, விளையாட்டு விழா, புகைப்படம், பதக்கங்கள், கோப்பைகள், கலைநிகழ்ச்சிகள் மற்றும் ஆசிரிய ஆசிரியைகளுக்கான நன்றி விழா என்பதற்கான செலவுகளுக்காக ஆண்டுக்கு பள்ளிக் குழந்தைகளின் சேர்க்கை எண்ணிக்கையை கொண்டு முதல் குழந்தைக்கு $200 மற்றும் உடன்பிறப்புகளுக்கு $175 கட்டணமாக நிர்ணயக்கப்பட்டு உள்ளது.